top of page

படக வழிபாட்டு தலத்தை சுற்றுலா தலமாக்கும் முயற்சி? ‘தேவர் பெட்டா’

  • Writer: Revanth Rajendran
    Revanth Rajendran
  • Oct 28, 2024
  • 4 min read

Updated: Mar 18

பூர்வகுடியின் வழிப்பாட்டு தத்தை சுற்றுலா தலமாக மாற்றுவது ஏற்புடையதல்ல. அது அம்மக்களின் மனதையும் அடையாளத்தையும் சிதைக்கும் செயலாகும். 


சுற்றுலா என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆர்வத்தையும் அளவில்லா மகிழ்ச்சியையும் தரும் நிகழ்வாகும். உலகையும், இயற்கையையும் கண்ணார காணவேண்டும்  என்பது அனைவருக்கும் ஏற்படும் இயல்பான ஆசை. அவ்வகையில் கடந்த சில காலமாக சுற்றுலா என்பது மிகவும் பெருகி வருகிறது. 


சுற்றலா தங்களும் மக்கள் வெள்ளம் கட்டுக்கடங்காமல் தடுமாறுகின்றன. 


அனைத்து அரசுகளும் சுற்றுலாவை மேம்படுத்த பல முயற்சிகள் எடுத்து வருகின்றன. தமிழக அரசும் இதற்க்கு விதிவிலக்கல்ல. தமிழகத்தில் உள்ள பிற பகுதிகள் போல நீலமலை மாவட்டத்திலும் சுற்றலா சார்ந்து பல பணிகள் மேற்கொண்டு வரப்படுகிறது. 'மலைகளின் அரசி' என்ற பெயரோடு இயற்க்கை சூழல் செழிப்பாக இருக்கும் மலையாக  நீலமலை இருப்பதால், இம்மாவட்டத்தில் கவனம் கூடுதலாகவே இருக்கிறது. 


மலையேற்ற பாதைகள் 


தமிழக சுற்றுலா மற்றும் வனத்துறையின் முயற்சியில் சமீபத்திய முயற்சியாக மலையேற்றம் கவனம் பெற்றிருக்கிறது. கடந்த அக்டோபர் 25ஆம் தேதி மலையேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு சேவை ஒன்றை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார். ட்ரேக் தமிழ்நாடு (trektamilnadu) என்ற வலைத்தளமும் இதற்கென துவங்கப்பட்டது. 


TN Deputy CM and Forest Minister on Trek TamilNadu Launch
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வனத்துறை அமைச்சர் பொன்முடி, தலைமை செயலகத்தில் மலையேற்ற சுற்றுலாவை துவங்கி வைத்த நிகழ்வு.


இதற்காக தமிழகம் முழுவதிலிருந்தும் மொத்தம் 40 மலை பாதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில்  10 தளங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ளன. இந்த 10 தங்களில் குறிப்பிடப்பட  வேண்டிய செய்தி  என்னவென்றால், இதில் நீலகிரியின் பூர்வகுடிகளின் வழிப்பாட்டு தங்களும் அடங்கும். 


தேவர் பெட்டா 


நீலகிரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற பாதைகளில்  ஒன்று அவலாஞ்சி - தேவர் பெட்டா ஆகும். 


உலகம் முழுவதிலும் உள்ள பூர்வகுடிகளின் அடையாளங்களில் ஒன்று அவர்களது வழிபாட்டு முறை. இதில் இயற்கை வழிப்பாடும் அடங்கும். இவ்வகையில் படக மக்களின் இயற்கை வழிப்பாட்டு தங்களில் ஒன்று தான் தேவர் பெட்டா.  குறிப்பிட்ட அந்த மலையானது பெற்றிருக்கும் பெயரே இதனை உணர்த்தும். 


படக மொழியில் 'தேவரு' என்றால் தெய்வம் என்று பொருள். 'பெட்டா' என்றால் மலை என்று பொருள். ஆகவே தேவர் பெட்டா என்பதின் பொருள், தெய்வத்தின் மலை என்பது மட்டும் அல்ல, அம்மலையே தெய்வம் என்பது தான். 


இந்த ‘தேவர் பெட்டா’ மலையானது நீலகிரியின் குந்தா பகுதியில் அமைத்திருக்கிறது. குறிப்பாக கூறவேண்டும் என்றால் கீழ் குந்தாவை தலைமை ஊராக கொண்டிருக்கும் முள்ளிகூர் அருகில் இருக்கிறது. மேலும் மூரட்டி (மூன்று ஹட்டிகள்) என்று கூட்டாக அழைக்கப்படும் முள்ளிகூர், ஒசா ஹட்டி மற்றும் பிக்கட்டியை சார்ந்த படக மக்களும் குந்தா பகுதியை சேர்ந்த மக்களும்  வருடாந்திர மலையேற்றம் செய்து தேவர் பெட்டா பூசை நடத்தி வழிபடுவர். இந்த கடுமையான பாதையில் காலணிகள் கூட அணியாமல் தான் படக மக்கள் இம்மலை மீது ஏறி செல்வர். மேலும் சிகரத்தின் கடைசி பாகத்தை தொட்டு வணங்கிய பிறகு தான் மேலேறி செல்லவே முற்படுவர். இவ்வாறு ‘தேவர் பெட்டா’ மீது பெரும் மரியாதையை படக மக்கள் கொண்டுள்ளனர். 


புனிதமாக கருதப்படும் இம்மலையை சுற்றுலா தமாக மாற்றுவது, படக மக்களையும் அவர்களது வழிபாட்டு முறையையும் அவமானப்படுத்திடும் செயலாகும். 


40 மலையேற்ற பாதைகளும் தமிழக வனத்துறையின் ஒப்புதலோடு தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவ்வகையே தேவர் பெட்டாவும் வனத்துறை ஒப்புதலோடு தான் சேர்க்கப்பட்டுள்ளது. 


இந்த மலையை படக மக்கள் தெய்வமாக வணங்குவது வனத்துறைக்கு நன்றாக தெரிந்த ஒன்றே. வருடாந்திர மலையேற்றத்திற்கு முன்னதாக,   செல்லும் பாதையை பராமரிக்கும் பணியும்  வனத்துறை கவனத்தோடு தான் செய்துவரப்படுகிறது. படக மக்களின் புனித மலைகளில் ஒன்று என்பதை நன்கு  அறிந்தும் கூட வனத்துறை இவ்வாறு செய்திருப்பது படக மக்களின் உணர்வை வேண்டுமென்றே உதாசினப்படுத்தி அவமதிக்கும் செயலாகும். 


படக மக்கள் மலைகளை புனிதமாக கருதுவதற்கு பல காரணங்கள் உள்ளன. படக மக்களின் இயற்க்கை வழிபாடுகளின் ஒன்றான 'மே அரக்கே' என்றழைக்கப்படும் 'மழை வேண்டி பூசை' ஆதிகாலம் தொட்டு குறிப்பிட்ட சில மலைகளில் தான்  நடைபெறும். இம்மக்களின் உணவு ஆதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எருமைகள் பெரும்பாலும் புற்கள் அதிகம் உள்ள மலை மேடுகளில் தான் மேய்ந்து வரும். எல்லாவற்றிற்கு மேலாக படக குடிகளின் மூதாதையர்கள் ஊர் காவலுக்காகவும் குறிப்பிட்ட மலைகள் மீது தான் நின்றிருப்பர். இது போன்ற பல அம்சங்கள் தேவர் பெட்டா போன்ற மலைகளுக்கு உண்டு. 


இத்தனை புனிதம் மற்றும் சிறப்பு மிக்க மலைகளை சுற்றுலா காட்சி பொருளாக மாற்றுவது துளியும் மரியாதை இல்லை. 


வன உயிர் மற்றும் மனித உயிர் பாதுகாப்பு 


யானை, புலி, காட்டெருமை, கரடி உள்பட பல வன உயிர்கள் இந்த மலை காடுகளின் வாழ்கின்றன. வன விலங்குகளையும் அதன் வாழ்விடத்தையும் காப்பது நமது கடமை ஆகிறது. 


அரசின் இந்த மலை ஏற்ற சேவை வன பாதுகாப்பின் எதிரியாக அமையும். 


மக்கள் அனைவரும் ஒன்றை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். வனவிலங்குகள் எப்போதும் இன்னொரு விலங்கு அல்லது மனிதனின் பாதையில் இருந்து விலகி செல்லவே நினைக்கும். மனிதர்க்கும் இந்த விதி பொருந்தும். 


தற்போது நடந்து வரும் தேவர் பெட்டா பூசையானது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தான் நடக்கும். அதிலும் மக்கள் பெரும் கூட்டதோடு செல்வதால் வன விலங்குகள் சற்றே அப்பகுதியை விட்டு விலகி செல்லும். சில மணி நேரங்களே பூசை என்பதால், மக்கள் பூசை முடிந்து ஊர் திரும்பிய பின் வன விலங்குகளும் அதன் அன்றாட பாதைக்கு திரும்பம். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. 


ஆனால் அரசின் இந்த மலையேற்ற சுற்றுலா என்பது அன்றாடம், தினம் தினம் செயல்படும். சுற்றுலா பயணிகள் அதிகம் வர வர, வன விலங்குகள் அப்பகுதியை விட்டு வெளியேறவே முயலும். வெளியேறுவது என்றால் வேறெங்கும் இல்லை காட்டை ஒட்டி உள்ள கிராமங்களுக்குள் தான் செல்லும். ஏற்கனவே வன விலங்குகள் முற்றுகையால் அவதியிலும் அச்சத்திலும் வாழும் பூர்வகுடிகள் மேலும் துன்பத்திற்கு ஆளாவார்கள்.  


தற்போது மலையேற்றம் நடந்து வரும் பல தங்கள் குப்பை மேடாகவும் வனஉயிர்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதியாகவும் மாறி வருவது அனைவருக்கும் தெரிந்த செய்தி தான். 


வனஉயிர் மற்றும் பூர்வகுடிகள் உயிரை பணயம் வைக்கும் இந்த மலையேற்ற சுற்றுலா அவசியம் தானா?


வளர்ச்சி என்ற பெயரில் வீழ்ச்சி 


நீலகிரி சுற்றுலா தளம் அல்ல, இது இரு விவசாய பூமி. ஆதி காலம் தொட்டே விவசாயம் தான் நீலகிரியின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கின்றது. விவசாயம் மற்றும் இயற்கையை ஓரம் தள்ளி வேண்டுமென்றே சுற்றுலாவிற்கு முக்கியத்துவம் அளிப்பது பணத்திற்காக தானே தவிர மக்களுக்காக அல்ல. 


வளர்ச்சி, மேம்பாடு, பாதுகாப்பு என்ற பெயரில் தான் பல திட்டங்கள் கொண்டு வர படுகின்றன. அனால் இவற்றில் பல படக பூர்வகுடிகள் உள்பட அனைத்து பழங்குடிகளுக்கும் இன்னலாகவே வந்து சேர்கின்றன. உள்ளூர் வாசிகள் வீடு கட்ட முடியாது ஆனால் வெளியூர் பணக்காரர்கள் சொகுசு மாளிகை கட்ட முடியும், விவசாய நிலத்தில் கட்டுமானம் செய்ய கூடாதென்று அரசே கூறுகிறது அனால், இன்று பல விவசாய நிலத்தில் தான் சொகுசு விடுதிகள் கட்டப்படுகின்றன. 


வன பாதுகாப்பு என்ற பெயரில் பல நூறு ஆண்டுகளாக வனத்திற்குள் வாழ்ந்து வரும் பழங்குக்குடிகளை வெளியேற்றுகின்றார்கள் மறுபுறம் வன பகுதியின்  அருகிலேயே சொகுசு விடுதி கட்டவும் இதுபோன்ற  மலையேற்றம் போன்ற சாகசங்கள் நடத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 


இத்தனை முரண்பாடுகள் ஏன்? பூர்வகுடிகளின் வாழ்வை கருத்தில் கொள்ளாதது ஏன்?


வளர்ச்சி என்ற பெயரில் இன்னும் பல தவறுகள் நடப்பது மக்களுக்கு நன்று தெரிந்ததே. 


இதுவரை மறைமுகமாக சுரண்டி வந்தவர்கள், தற்போது நேரடியாகவே பூர்வகுடிகள் நம்பிக்கை மற்றும் அடையாளத்தில் கை  வைக்க துவங்கிவிட்டனர் 


ஏன் தேவர் பெட்டாவில் சுற்றுலா தடை செய்ய வேண்டும் ?


காலில் செருப்பு அணிய முடியும் என்பதற்காக கோவிலுக்குள் செருப்போடு செல்ல முடியாது. மாமிசம் உண்ண முடியும் என்பதற்காக மயிலயோ மானையோ உண்ண முடியாது. இச்செயல்களுக்கு அரசே தடை விதிக்கும், மீறினால் தண்டிக்கும். காரணம் என்னவென்றால்,  அது அதற்கென ஒரு மாண்பு உண்டு மரியாதை உண்டு. 


அதுபோலவே பாதை இருக்கிறது செல்ல முடியம் என்பதற்காக பூர்வகுடிகள் வழிப்பாட்டு தளத்தை சுற்றுலா பகுதியாக அறிவித்திட கூடாது. தேவர் பெட்டவிற்கென மாண்பு உண்டு மரியாதை உண்டு எல்லாவற்றிக்கும் மேலாக படக மக்களிடத்தில் புனித தளம் என்னும் அடையாளம் உண்டு. எனவே பூர்வகுடியின் வழிப்பாட்டு தளத்தை சுற்றுலா தலமாக மாற்றுவது ஏற்புடையதல்ல. அது அம்மக்களின் மனதையும் அடையாளத்தையும் சிதைக்கும் செயலாகும். 


எனவே, மலையேற்ற சுற்றுலாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களிலிருந்து ‘தேவர் பெட்டா’ பாதையை அரசு நீக்கிட வேண்டும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களில் பூர்வகுடிகள் மத்தியில் இருக்கும் முக்கியத்துவத்தை ஆராய்ந்து  மறுபரிசீலனை செய்யவேண்டும். பூர்வகுடிகள் வாழ்வோடும் அடையாளத்தோடும் ஒன்றி உள்ள மலைகளை சுற்றுலா பகுதியாக மாற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும். 


தடுக்காத நிலையில், இது முதல் சம்பவமாக இருக்காது. இதன்  பிறகு பல பூர்வகுடிகளின் தளங்கள் வரிசையாக வீழும்.


1 Comment


விஸ்வநாதன் இத்தலார்
Mar 11

புனிதமான தேவர் பெட்டா பகுதிகளை சுற்றுலா தலமாக மாற்ற ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.ஒத்துழைப்புதர தயாராகயிருக்கிறோம்.

Like

Project Betta

  • Instagram
  • Facebook
  • YouTube
  • X
  • LinkedIn
  • Whatsapp
  • Whatsapp

Join the
Betta Channel.
Get instant updates!

Thanks for subscribing!

bottom of page