top of page

படக மக்களை இழிவு படுத்திய ஊடகவியலாளர்: முக்தார் அகமது

  • Writer: Revanth Rajendran
    Revanth Rajendran
  • Feb 12
  • 2 min read

முக்தார் அகமது, மை இந்தியா 24x7 என்ற ஊடகத்தின் தலைமை ஆசிரியராக இருக்கும் இவர் பல சர்ச்சை நேர்காணல்களால் பிரபலம் அடைந்தவர்.  எதிர் இருப்பவர்களை  இழிவு படுத்தும் வகையில் தான் இவரது நேர்காணல்களும் செய்தி வெளியீடுகளும் இருக்கும். 


முக்தார் அகமது
முக்தார் அகமது


தற்போது பல படிகள் மேல சென்று பூர்வகுடி மக்களையும் பெண்களையும்  இழுவுபடுத்த துவங்கியிருக்கிறார்


நீலகிரி மலை பகுதிகளில் வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களான படக மக்கள் பல ஆயிரம் ஆண்டு வரலாறோடு, அவர்களுக்கென தனி கலாச்சாரம், ஆடல், பாடல் என ஒரு வாழ்க்கை முறையை பின்பற்றி வருகின்றனர். உலகில் உள்ள  அனைத்து பழங்குடிகள் போல படக மக்களும் அவர்களுக்கென தனி நடன முறையை கொண்டுள்ளனர். பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து நிகழ்வுகளிலும் நடனம் ஆடி தங்கள் மகிழ்ச்சியையும் அவர்களது தெய்வங்களுக்கான மரியாதையையும் வெளிப்படுத்துவர். 

இவ்வாறு நடந்த ஒரு நிகழ்வை தான் முக்தார் அகமது இழிவுபடுத்தி உள்ளார். 


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்கள், ஒரு நல்ல நிகழ்வுக்காக நீலைமையில் உள்ள ஓர் படக கிராமத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு வந்தவர், படக மக்களோடு அந்நிகழ்வில் கலந்துக்கொண்டு, பூர்வகுடிகள் நடனத்தை கிராம மக்களோடு சேர்ந்து ஆடி மகிழ்ந்துள்ளார். 


இந்த காணொளி காட்சியை, முக்தார் தனது சமூக வலைத்தளத்தில் இழிவாக பதிவிட்டுள்ளார். 


திரு சீமான் அவர்கள் குடித்துவிட்டு பெண்களோடு குத்தாட்டம் போடுகிறார் என்று, மிகவும் இழிவாக, படக கலாச்சாரத்தை தூற்றி பெண்களை அவமானப்படுத்தி பதிவிட்டுள்ளார். 


சீமான் மது போதையில் பெண்களுடன் குத்தாட்டம்”,  இவ்வாறே குறிப்பிட்டு ஒரு காணொளி காட்சியை பதிவேற்றம் செய்துள்ளார். அந்த காணொளியில்   திரு சீமான் அவர்கள்,  ஆண்கள் பெண்கள் என படக மக்கள் அனைவரோடும் படக நடனத்தை ஆடுவதை காணலாம். 


முக்தாரின் X தள பதிவு (பொறுப்புணர்வு கருதி சிறிய தொகுப்பு இதில் சேர்க்கப்பட்டுள்ளது. முழு செய்து காவல் துறைக்கு ஒப்படைக்கப்படும்)

படக பூர்வகுடிகளில் ஆண் பெண் என்ற பேதம் கிடையாது. ஆதி காலம் முதலே பெண்களுக்கு சம உரிமையும் உரிய மரியாதையும் வழங்கி வரும் வாழ்வியல் பழக்கத்தை கொண்டுள்ளது. அதுபோலவே திருமணம், திருவிழா இறப்பு என அனைத்து நிகழ்வுகளிலும் அனைவரும் நடனமாடித்தான் தங்கள் மகிழ்ச்சியையும் மரியாதையையும் வெளிப்படுத்துவர். 


இங்குள்ள உன்னத வழக்கம் இவ்வாறு இருக்கையில், குடித்துவிட்டு குத்தாட்டம் என குறிப்பிடுவது  படக குடிகளை இழிவு படுத்துவதாக உள்ளது. மேலும் படக மக்களின் உணர்வை மதிக்காத செயலாகும். 


மேலும் ஒரு ஆண் குடித்திவிட்டு பெண்களோடு குத்தாட்டம் போடுகிறான் என்றால், அதற்க்கு என்ன அர்த்தம் என்பதை அனைவரும் அறிவர். 


ஆனால் நாகரிகமற்ற முக்தார் போன்ற கேவலமானவர்களுக்கு இது பற்றி தெரிய வாய்ப்பில்லை. 


இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பூர்வகுடி மக்களையும் பெண்களையும் இழிவு படுத்திய முக்தார் மீது இணையதள வழியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இணையவழி குற்ற தடுப்பு பிரிவு புகாரை ஏற்றுக்கொண்டுள்ளது. நீலகிரி காவல்துறை பூர்வகுடி பெண்களையும் மக்களையும் இழிவுபடுத்திய முக்தார் அகமத் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 


படக குடியை சேராத மற்ற மக்கள், படக மக்களோடு அவர்கள் நடனத்தை ஆடுவதென்பது, அந்த மக்களுக்கும் அவர்கள் கலாச்சாரத்திற்கும் மரியாதை செலுத்தும் செயலாகும். இதற்க்கு முன்னும் பல அரசியல் தலைவர்கள் இதை செய்துள்ளனர். முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா முதல் தற்போதைய முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வரை பல கட்சி தலைவர்கள் படக நடனம் ஆடி இந்த மக்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். அந்த வகையில் தான் சீமான் அவர்களது பங்கேற்பும் பார்க்கப்படுகிறது. 


ஆனால் இந்த நிகழ்வை இவ்வளவு கேவலமான கண்ணோட்டதோடு பார்க்கும் முக்தார் போன்றவர்களை என்னவென்று குறிப்பிடுவது.


Comments


Project Betta

  • Instagram
  • Facebook
  • YouTube
  • X
  • LinkedIn
  • Whatsapp
  • Whatsapp

Join the
Betta Channel.
Get instant updates!

Thanks for subscribing!

bottom of page